பொழுதுபோக்கு
விருமாண்டி படத்திற்காக வந்த 6 கதைகள்; 5-வது கதை சூப்பர்: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்!
விருமாண்டி படத்திற்காக வந்த 6 கதைகள்; 5-வது கதை சூப்பர்: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்!
இந்திய சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராக இருக்கும், கமல்ஹாசன், நடிப்பு, இயக்கம், திரைக்கதை எனப் பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தவர். இவர் இயக்கிய திரைப்படங்களில் “விருமாண்டி” (2004) ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்ததற்கு முக்கிய காரணம், அதன் புத்திசாலித்தனமான, சிக்கலான திரைக்கதை தான். சாச்சி 420 (1997) மற்றும் ஹே ராம் (2000) ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல் ஹாசன் இயக்கிய மூன்றாவது படம் விருமாண்டி.ஆங்கிலத்தில் படிக்க: Kamal Haasan recalls coming across six fan theories predicting Virumaandi’s story while its production was underway: ‘The fifth one was actually really good’கமலுடன் பசுபதி, அபிராமி மற்றும் நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர்-இயக்குனர் கமல்ஹாசன் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். “விருமாண்டி” படம் உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் பலவிதமான கதை யூகங்களையும், திரைக்கதை கணிப்புகளையும் தெரிவித்திருந்தார்களாம். அவற்றில் சில தமக்குப் பிடித்திருந்ததாகவும் அவர் கூறினார்.மணிரத்னத்துடன் 38 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள “தக் லைப்” படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில், இந்த இருவரிடமும் ரசிகர்கள் படத்தின் கதை குறித்து ஏதாவது யூகித்து வெளியிட்ட பதிவுகளைப் பார்த்தீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கமல், “அப்படி நாங்க படிக்க ஆரம்பிச்சோம்னா, எங்க கதையே மாறிடும் போலிருக்கே” என்று நகைச்சுவையாகக் கூறினார். மேலும், “சில கதைகள் உண்மையிலேயே நல்லா இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.அவர் மேலும் கூறுகையில், “‘விருமாண்டி’ படப்பிடிப்பு நடந்துட்டு இருந்தப்போ, குறைஞ்சது ஆறு கதைகளையாவது நான் பார்த்தேன். அஞ்சாவது கதை ரொம்ப நல்லாயிருந்துச்சுன்னு நினைச்சேன். ஆனா என்ன பண்றது? படம் ஏற்கனவே தயாரிப்பில் இருந்திடுச்சே. அந்த கதையை எழுதினவருக்கு நான் பதில் அனுப்பினேன். எதிர்காலத்துல நான் எடுக்கப்போற படத்துல இந்த கதையை யோசிக்கிறேன்னு சொன்னேன். ‘உங்க கதை உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. ஆனா நான் வேற ஒரு கதையை முடிவு பண்ணிட்டேன். அது உங்க கத மாதிரி இல்ல’ன்னு சொன்னேன்” என்று கூறினார்.தொழில்நுட்ப மேன்மைக்கும், நடிகர்களின் சிறப்பான நடிப்புக்கும் பெயர் பெற்றது மட்டுமல்லாமல், “விருமாண்டி” படத்தின் தயாரிப்பு நிலையிலிருந்தே பல சர்ச்சைகளையும் சந்தித்தது. இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் “சண்டியர்”. இது தெற்கு தமிழ்நாட்டில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு ரவுடியை அல்லது குண்டனைப் புகழ்ந்து பேசும் ஒரு தமிழ் வார்த்தையாகும்.”தக் லைஃப்” படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் சில நெகிழ்ச்சியான தருணங்களும் நிகழ்ந்தன. “விருமாண்டி” படத்தில் கதாநாயகியாக நடித்தவரும், தற்போது “தக் லைஃப்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவருமான அபிராமி, முன்னோட்டத்தைப் பார்த்ததும் மேடையில் கண்ணீர் விட்டு அழுதார். முன்னோட்டத்தையும், ரசிகர்கள் வரவேற்பையும் பார்த்துத் தான் பேச முடியாதவராக ஆகிவிட்டதாகக் கூறிய அபிராமி, அந்த தருணம் தன்னுடைய சிறுவயதுப் பெயரான திவ்யாவை தட்டி எழுப்பியதாகக் கண்ணீருடன் தெரிவித்தார்.”லவ் யூ சார்; லவ் யூ போத்” என்று அந்த இரு ஜாம்பவான்களிடமும் உணர்ச்சி ததும்பக் கூறினார். “இப்பவும் என்னால நம்ப முடியல, என் வாழ்க்கையில இப்படி ஒரு விஷயம் நடந்துச்சுன்னு” என்றார். அப்போது தொகுப்பாளர், திவ்யா எப்படி குணா (1991) படத்தின் கதாநாயகி ரோகிணியின் (ரோஷினி) கதாபாத்திரமான அபிராமியின் மீதுள்ள காதலால் கதாநாயகன் குணா (கமல் ஹாசன்) அழைத்த பெயரான அபிராமியைத் தனது திரைப் பெயராக மாற்றிக்கொண்டார் என்பதை நினைவு கூர்ந்தார்.ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், கமல் ஹாசன் “குணா” படத்தில் அவர் அபிராமியை அழைத்தது போலவே அபிராமியை அழைத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அபிராமி, கமலுக்கு மேடையிலேயே ஒரு அன்பான அணைப்பைக் கொடுத்தார்.