பொழுதுபோக்கு

ஹாலிவுட் படங்களின் காப்பிதான் பாலிவுட் படங்கள்; சுஹாசினி மணிரத்னம் த்ரோபேக் விமர்சனம்!

Published

on

ஹாலிவுட் படங்களின் காப்பிதான் பாலிவுட் படங்கள்; சுஹாசினி மணிரத்னம் த்ரோபேக் விமர்சனம்!

இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் திரையுலகம் குறித்து தனது கருத்துக்களை தயக்கமின்றி வெளிப்படுத்தி வருகிறார், அதிலும் குறிப்பாக, இந்தி திரைப்படத் துறையின் தற்போதைய நிலை குறித்து அவர் பலமுறை பேசியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, பாலிவுட்டின் நிலை குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, திரைப்பட இயக்குனர்கள் காப்பியடிப்பதை அவர் வெளிப்படையாக சாடினார்.ஆங்கிலத்தில் படிக்க: Mani Ratnam’s wife Suhasini once called out Bollywood for ‘blatantly copying’ Hollywood films; criticised Priyanka Chopra-Ranbir Kapoor’s film2010 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ரன்பீர் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த ‘அஞ்சானா அஞ்சானி’ திரைப்படத்தை தான் பார்த்ததாகவும், அது ‘பிஃபோர் சன்ரைஸ்’ (‘Before Sunrise’) மற்றும் ‘வாந கேர்ள் ஆன் தி ப்ரிட்ஜ் (‘The Girl on the Bridge’) ஆகிய படங்களின் சாயலில் இருந்தது. “பாலிவுட்டில் சில சமயங்களில் உரிமம் வாங்காமலோ அல்லது அசல் படைப்பை குறிப்பிடாமலோ கூட வெளிப்படையாக காப்பியடிக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.இருப்பினும், திபாகர் பானர்ஜியின் ‘கோஸ்லா கா கோஸ்லா’ மற்றும் ‘ஓய் லக்கி லக்கி ஓய்’ ஆகிய படங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருந்ததாகக் கூறி, அவர் இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த மற்றொரு பேட்டியில், ஆமீர் கான் மற்றும் ஷாருக் கான் போன்ற நட்சத்திர நடிகர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளாமல் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களையே திரும்பத் திரும்ப செய்வதாக அவர் விமர்சித்தார்.”ஆமீரும் ஷாருக் கானும் இன்னும் ஒரே மாதிரியான ஸ்டீரியோடாப்பிகல் (Stereotypical) கேரக்டர்களிலேயே நடிக்கின்றனர். அமிதாப் பச்சன் கூட தனது காலத்தில் ‘கோபக்கார இளைஞன்’ என்ற அடையாளத்தைத் தவிர வேறு எதையும் முயற்சித்ததாக நான் நினைக்கவில்லை. சுயாதீன சினிமா இன்னும் மெயின்ஸ்ட்ரீம் படங்களுடன் போராட வேண்டியுள்ளது. நான் 15 வருடங்களுக்கு முன்பு மெயின்ஸ்ட்ரீம் படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அவை முற்றிலும் தாங்க முடியாதவை,” என்று அவர் கூறினார்.அதே பேட்டியில், இந்தி படங்கள் பெரும்பாலும் “பான் இந்தியன்” திரைப்படங்களாகவே இருப்பதாகவும், பிராந்திய பார்வையாளர்களை அவை சென்றடைவதில்லை என்றும் அந்த படங்களின் கதைக்களத்தைப் பொறுத்தவரை அவர் இதைக் குறிப்பிட்டார்.  “இப்போதுதான் இந்தி படங்கள் பிராந்தியத்தை மையப்படுத்த முயற்சிக்கின்றன. அவர்கள் வழக்கமான பஞ்சாபி குடும்ப திருமணம் அல்லது மும்பை மற்றும் முஸ்லீம் வாழ்க்கையைப் பற்றிய ‘ஷாஹித்’ போன்ற படங்களை உருவாக்குகிறார்கள். இல்லையென்றால் அவர்கள் ‘கல் ஹோ நா ஹோ’ அல்லது ‘கபி குஷி கபி கம்’ போன்ற பான் இந்தியன் படங்களை மட்டுமே உருவாக்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.சுஹாசினி 1988 இல் மணிரத்னத்தை மணந்தார். அவர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version