இந்தியா

ஹைதராபாத் சார்மினார் அருகே பயங்கர தீ விபத்து; 17 பேர் மரணம்

Published

on

ஹைதராபாத் சார்மினார் அருகே பயங்கர தீ விபத்து; 17 பேர் மரணம்

Nikhila Henryஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் வரை உயிரிழந்தனர்.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்“சுமார் ஒன்பது பேர் தீக்காயமடைந்தனர், மீதமுள்ளவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்” என்று மூத்த தீயணைப்பு அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.சார்மினார் அருகே உள்ள ஒரு நகைக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, நகைக் கடை அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.“சம்பவ இடத்தில் 11 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.A devastating fire broke out in Gulzar House, under the jurisdiction of Mir Chowk Police Station in Hyderabad. The flames quickly engulfed the area, prompting a swift response from fire and rescue teams, who managed to save several people trapped inside.Sadly, three individuals… pic.twitter.com/pi6POh8vNAஇந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்” மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணம் அறிவித்தார். “தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று பிரதமர் அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.பாரத ராஷ்டிர சமிதி செயல் தலைவர் கே.டி.ராமராவ், “மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது!! பழைய நகரத்தில் நடந்த குல்சார் ஹவுஸ் தீ விபத்து பற்றிய விவரங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. இந்த துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த தீ மிக விரைவில் அணைக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைய தாமதமானதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜி.கிஷன் ரெட்டி கூறினார்.இருப்பினும், மூத்த தீயணைப்பு அதிகாரிகள், “சம்பவம் குறித்து தகவல் கிடைத்த 15 நிமிடங்களுக்குள்” தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 6.17 மணிக்கு தீ எச்சரிக்கை கிடைத்தது என்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version