சினிமா
25 வயது நடிகைக்கு ஜோடியாகும் நடிகர் சூர்யா..! அடுத்த பட அப்டேட் இதோ..
25 வயது நடிகைக்கு ஜோடியாகும் நடிகர் சூர்யா..! அடுத்த பட அப்டேட் இதோ..
தமிழ் சினிமாவில் முன்னனியில் இருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகிய “ரெட்ரோ ” திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகின்றது. தற்போது 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக படக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது.இதனை தொடர்ந்து சூர்யா rj பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். கங்குவா பட தோல்வியின் பின்னர் இவர் பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகின்றார். அந்த வகையில் தற்போது அடுத்து லக்கி பாஸ்கர் இயக்குநருடன் கூட்டணி வைக்கவுள்ளார்.இந்த நிலையில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் சூர்யா தனது 46வது பட கூட்டணி போட உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரேமலு நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். நாளை ராம நாயுடு ஸ்டூடியோவில் பூஜை போட உள்ளனர் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் Live-action படமாக இருக்குமாம். விரைவில் இதற்கான அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.