விளையாட்டு

DC vs GT Live Score: டெல்லிக்கு எதிரான போட்டி; டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

Published

on

DC vs GT Live Score: டெல்லிக்கு எதிரான போட்டி; டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல் 2025 தொடரின் முக்கியமான ஆட்டத்தில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. தொடர்ச்சியான தோல்விகளால் தடுமாறி வரும் டெல்லி அணிக்கு இது வாழ்வா சாவா ஆட்டமாக இருக்கும். அதே சமயம், குஜராத் அணி நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த போட்டி டெல்லிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  டெல்லி அணி கடைசியாக தர்மசாலாவில் பஞ்சாப் அணியுடன் விளையாட இருந்தது. ஆனால், ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐ.பி.எல் தொடரும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.அந்த ரத்து செய்யப்பட்ட போட்டி டெல்லி அணிக்கு மற்றொரு சாதகமற்ற முடிவாக அமைந்தது. கடந்த 5 போட்டிகளில் 3 தோல்விகளையும், 2 முடிவில்லாத போட்டிகளையும் சந்தித்துள்ள டெல்லி அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 11 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணிக்கு இன்றைய போட்டி கட்டாயம் வெல்ல வேண்டிய ஒன்றாகும்.ஆனால், இது டெல்லிக்கு எளிதாக இருக்காது. ஏனெனில், அணியின் முன்னணி விக்கெட் டேக்கரான மிட்செல் ஸ்டார்க், தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய பிறகு மீண்டும் அணிக்கு வரவில்லை. இது டெல்லி அணியின் பந்துவீச்சுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால், இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் ஜோஸ் பட்லர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக நாடு திரும்ப இருப்பதால், அவர்களுக்கு கடினமான சூழ்நிலையாக அமையும். குஜராத் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுக்கும் முழுப் பொறுப்பும் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் பி. சாய் சுதர்சன் ஆகியோர் மீது விழும். பட்லர் இன்றைய போட்டியில் விளையாடுவார். முன்னதாக, இந்த இரு அணிகளும் விளையாடிய போது அவர் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டத்தை மீண்டும் நிகழ்த்த அவர் முயற்சிப்பார்.இன்றைய போட்டி டெல்லி அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க முக்கியமானதாக இருக்கும். குஜராத் அணியை வீழ்த்தி அவர்கள் வெற்றிப் பாதைக்கு திரும்புவார்களா அல்லது குஜராத் அணி தங்கள் ஆதிக்கத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். கிரிக்கெட் ரசிகர்கள் இந்த விறுவிறுப்பான ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்குகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version