இலங்கை
அகதிகளை தங்க வைக்க இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை ; இலங்கை தமிழரின் கோரிக்கை நிராகரிப்பு
அகதிகளை தங்க வைக்க இந்தியா ஒன்றும் சத்திரம் இல்லை ; இலங்கை தமிழரின் கோரிக்கை நிராகரிப்பு
சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் நாடுகடத்தப்பட்டதை எதிர்த்து இலங்கையர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (19) மறுத்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை தங்க வைக்கக்கூடிய ‘தர்மசாலை’ (சரணாலயம்) அல்ல என்றும் நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
இந்தியா ஏற்கனவே 140 கோடி மக்கள்தொகையுடன் போராடி வருகிறது. வெளிநாட்டினரை வரவேற்கக்கூடிய தர்மசாலை அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழ் குடிமகனான மனுதாரர், தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நாடுகடத்தலில் இருந்து பாதுகாப்பு கோரியிருந்தார்.
“வேறு ஏதாவது நாட்டிற்குச் செல்லுங்கள்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து, மனுவை நிராகரித்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட மனுதாரரை 7 ஆண்டு சிறைத்தண்டனையை முடித்தவுடன் உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இன்றைய விசாரணையின் போது, மனுதாரரின் வழக்கறிஞர், தண்டனைக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நாடுகடத்தல் நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படாமல் இருப்பதாகவும் வாதிட்டார்.
விசாவில் இந்தியாவிற்குள் நுழைந்த மனுதாரர், இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
மனுதாரர் ஒரு அகதி என்றும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஏற்கனவே இந்தியாவில் குடியேறிவிட்டனர் என்றும் வழக்கறிஞர் பதிலளித்தார்.
மனுவை நிராகரித்த நீதிபதி தத்தா, இந்தியா அகதிகளை தங்க வைக்க ‘தர்மசாலை இல்லை என கூறி இலங்கை தமிழரின் கோரிக்கையை நிராகத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.