இலங்கை
அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர், விசேட மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பில் பொதுமக்கள் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.