இலங்கை

அரச வாகன ஏலம் விடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு!

Published

on

அரச வாகன ஏலம் விடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு!

ஜனாதிபதி செயலகத்தில் அதிசொகுசு வாகனங்கள் ஏலம் விடப்பட்ட சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த முறைப்பாட்டை சுவர்ணபூமி தேசிய இயக்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் செய்துள்ளார். 

Advertisement

வாகனங்கள் விலைமனு கோரல் செயல்முறை மூலம் வழங்கப்பட்டதாகவும், மதிப்பிடப்பட்ட பெறுமதி மிகக் குறைவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர்; விலைமனு கோரல் மதிப்பீடு குறைவாக இருப்பதால் வாகனங்களுக்காக வழங்கப்படும் பணம் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார். 

எனவே, மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ள வாகன ஏலங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுவர்ணபூமி தேசிய இயக்கம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version