இந்தியா
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என இந்திய இராணுவம் அறிவிப்பு!
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என இந்திய இராணுவம் அறிவிப்பு!
மே 12 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கான” ஒப்பந்தம் மே 18 அன்று முடிவடைகிறது என்று பாகிஸ்தான் பலமுறை கூறியதன் பின்னணியில், அதற்கு “காலாவதி தேதி இல்லை” என்று இந்திய ராணுவம் கூறியுள்ளது.
இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் [DGMO] பேச்சுவார்த்தை இன்று திட்டமிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மே 12 அன்று DGMO-க்களின் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டபடி, போர் நிறுத்தத்தைத் தொடர்வதைப் பொறுத்தவரை, அதற்கு காலாவதி திகதி இல்லை” என்று ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை