இலங்கை
இலங்கையில் சரிந்து வரும் தங்கம் விலையால் மக்கள் மகிழ்ச்சி!
இலங்கையில் சரிந்து வரும் தங்கம் விலையால் மக்கள் மகிழ்ச்சி!
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் 259,000 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 239,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 32,375 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் 1 கிராமின் விலை 29,950 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவெளை கடந்த சில வாரங்களை ஒப்பிடும்போது தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இலங்கையில் கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலையானது இருபதாயிரம் ரூபாவை விட அதிகமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.