இலங்கை
இளைஞனை பலியெடுத்த மோட்டார் சைக்கிள்கள் ; ஒருவர் படுகாயம்
இளைஞனை பலியெடுத்த மோட்டார் சைக்கிள்கள் ; ஒருவர் படுகாயம்
பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடபாத்த வீதியில், மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பொல்கசோவிட்ட பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
மடபாத்தயிலிருந்து பிலியந்தலை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வலது பக்க வீதியில் திரும்பும் போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற மற்றையவர் காயமடைந்து வெரஹெர இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவரின் சடலம் பிலியந்தலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.