வணிகம்
எங்கு தொடங்கும் எங்கு முடியும்: ரூ.15,000 சம்பளம் இப்போ ரூ.1 கோடி சொத்து மாறிடுச்சு… பெங்களூரு இளைஞரின் அசாதாரணப் பயணம்!
எங்கு தொடங்கும் எங்கு முடியும்: ரூ.15,000 சம்பளம் இப்போ ரூ.1 கோடி சொத்து மாறிடுச்சு… பெங்களூரு இளைஞரின் அசாதாரணப் பயணம்!
சில வழிமுறைகளையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால், ரூ.1 கோடி சொத்து சேர்ப்பது கடினமில்லை என்று பெங்களூரு டெக்கி ஒருவர் தனது வாழ்க்கை கதையை பகிர்ந்துள்ளார். ரெட்டிட் தளத்தில் பெங்களூரு டெக்கி ஒருவர், சாதாரண குடும்பத்தில் பிறந்து குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த கதையை விவரித்துள்ளார். குறைந்த வருமானம் கொண்ட பின்னணியில் இருந்து வந்த போதிலும், 30 வயதிற்குள் நிதி நிலைத்தன்மை அடைய முடிந்துள்ளதாக அவர் கூறி உள்ளார். 23 வயதில் வேலைக்குச் சேர்ந்த இவர், 30 வயதுக்குள் ஒரு கோடி சேமித்துள்ளார். பொறுமையும், சரியான பாதையில் பயணித்தாலும் போதும், செல்வம் நம்மைத் தேடி வரும் என்கிறார். ஏழைக் குடும்பம், கடன் வாங்கிப் படிப்பு அப்பாவுக்கு ₹8,000, அம்மாவுக்கு ₹5,000 சம்பளம். இதில் தான் எங்கள் வாழ்க்கை ஓடியது. என் பள்ளி, கல்லூரிப் படிப்புக்குக் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. நான் நன்றாகப் படிக்கும் மாணவன் அல்ல. ஆனால், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நான், JEE தேர்வில் தேறிய பிறகு, கல்லூரியில் சேர பணம் இல்லை. குடும்பத்தினர் உதவியால் படிப்பை முடித்த நான், 2018-ல் பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது, சம்பளம் பெங்களூருவின் விலை உயர்ந்த வாழ்க்கை பெங்களூருவின் விலைவாசி உயர்ந்த சூழலில், PG வாடகை, உணவு, சிற்றுண்டி செலவுகள், இதர செலவுகளைச் சமாளிப்பதே சவாலாக இருந்தது.புதிய உடைகள் வாங்க முடியவில்லை, இதர செலவுகளுக்குப் பணம் இல்லை. ரூ.15,000 சம்பளத்தில் ரூ.2,000 சேமித்த நான், கொரோனா காலத்தில் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைத்ததால், புதிய வேலைக்குச் சென்றேன். 2022-ல் ஆண்டுக்கு ரூ.32 லட்சம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 30 வயதுக்குள் நான் சேமிப்பு செய்து, கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என்பது என் இலக்கு. அதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.35 வயதில் நிதி ரீதியாக வலுவாக வேண்டும் சம்பளம் உயர்ந்தாலும், நான் ஆண்ட்ராய்டு போனை மாற்றவில்லை. 2019-ல் வாங்கிய போனை இன்னும் பயன்படுத்துகிறேன். தேவையில்லாத உடைகள் வாங்குவதில்லை. நிறுவனம் கொடுத்த டி-ஷர்ட்கள் போதும். செருப்பு, ஷூ விலை ரூ.250, ரூ.1,000. விலை உயர்ந்த பொருட்கள் என்னிடம் இல்லை. பிராண்டட் பொருட்கள் எனக்குத் தேவையில்லை. ஆடம்பர வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை.ஏழைக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, கொஞ்சம் சம்பளம் வந்ததும் மாற வேண்டும் என்று தோன்றவில்லை. 35 வயதில் நான் முழுமையாக நிதி ரீதியாக வலுவாக வேண்டும். வேலை இல்லாவிட்டாலும், கடன் வாங்காமல் வாழ வேண்டும். முதலீட்டில் கவனம் செலுத்தி வருகிறேன். SIP, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்துள்ளேன். இப்போது மாதம் ரூ.71,000 SIP-யில் முதலீடு செய்கிறேன்.2023-ல் இந்தத் தொகை ரூ.31.6 லட்சமாக உயர்ந்தது. 2025-ல் ஒரு கோடியாக மாறியது. ரூ.25 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு செய்துள்ளேன். கூடுதலாக ரூ.10 லட்சத்துக்கு பெற்றோருக்கும் காப்பீடு செய்துள்ளேன். சில முதலீடுகள் செய்துள்ளேன். எல்லாம் வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற சிறிய முதலீடுகள். ஆனால், அவற்றின் வருமானம் நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இவரது இப்பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.www.reddit.com/r/personalfinanceindia/comments/1kmc6vl/milestone_check_started_at_24_lpa_at_23_achieved”நீங்கள் உங்கள் வாழ்க்கையின் தொடக்க புள்ளியில் இருந்தாலும்கூட, இந்த கதை தொடர்ந்து செல்ல உங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்” என்று அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.