சினிமா
ஒரே ஒரு படம் தான்.. பாப்புலர் நடிகை கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்
ஒரே ஒரு படம் தான்.. பாப்புலர் நடிகை கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்
இன்றைய சென்சேஷனல் நாயகிகளில் ஒருவர் கயாடு லோஹர். டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து இதயம் முரளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி, சிம்புவின் 49வது படத்திலும் ஜீ.வி. பிரகாசுடன் ‘இம்மார்டல்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது கோலிவுட் திரையுலகின் பிஸியான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.இந்நிலையில், கயாடு லோஹர் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, கயாடு லோஹர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் அவரது சம்பளத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. டிராகன் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் அவருக்கு கிடைக்கும் புகழ் அதிர்ச்சி அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.