இலங்கை
காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு ; தமிழர் பகுதியில் சம்பவம்
காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு ; தமிழர் பகுதியில் சம்பவம்
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் கொக்கேயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் பொதி ஒன்று ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாகரை முகாமிற்கும் கடற்படை அதிகாரிகளுக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் பொதி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கொக்கேயின் போதைப்பொருள் பொதி ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.