சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 5வது இறுதிசுற்று போட்டியாளர் யார்?

Published

on

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10!! 5வது இறுதிசுற்று போட்டியாளர் யார்?

விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தற்போது ஜுனியருக்கான 10வது சீசன் நடைபெற்று வருகிறது.இதில் பிரியங்காவும் மாகாபா ஆனந்தும் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டில் போட்டியாளர்கள் பாடல்கள் பாடி வர தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.இதில், ஆத்யா, சாரா ஸ்ருதி, நஸ்ரின், லிடன் என 4 பைனலிஸ்ட் இதுவரை தேர்வானார்கள்.இந்நிலையில், கடந்த வார எபிசோடில் சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 சீசனின் 5வது பைனலிஸ்ட் தேர்வாகியுள்ளார்.அது வேறு யாருமில்லை, தேனியை சேர்ந்த காயத்ரி தான் 5வது பைனலிஸ்டாக தேர்வாகியுள்ளார். இந்த 5 பேரில் யார் 10வது சீசன் டைட்டிலை ஜெயிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version