வணிகம்
சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ₹280 அதிகரிப்பு
சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ₹280 அதிகரிப்பு
சென்னையில் இன்று (மே 19) தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹280 அதிகரித்து, ₹70,040-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் தங்கம் விலை ₹35 உயர்ந்து, ₹8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மே 16-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹880 உயர்ந்து ₹69,760-ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இரண்டு நாட்கள் விலையில் மாற்றம் ஏதும் இன்றி இருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.ஒரு கிராம்: ₹7,210 (₹60 உயர்வு) ஒரு சவரன்: ₹57,680 (₹480 உயர்வு)வெள்ளி: ஒரு கிராம்: ₹109 (₹1 உயர்வு) ஒரு கிலோ: ₹1,09,000 (₹1,000 உயர்வு)