சினிமா
“டூரிஸ்ட் பாமிலி” இயக்குநர் அபிஷன் ஜீவந்தை சந்தித்த தனுஷ் ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
“டூரிஸ்ட் பாமிலி” இயக்குநர் அபிஷன் ஜீவந்தை சந்தித்த தனுஷ் ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
அபிஷன் ஜீவந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம்”டூரிஸ்ட் பாமிலி” திரையரங்குகளில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியில் சாதனை பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் அறிமுக இயக்குநரான அபிஷன் ஜீவந்த் சந்தித்து பேசி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.மே 1 வெளியகிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேசு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். யோகிபாபு, எம். எசு. பாசுகர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி என்னும் பலர் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம் இலங்கை தமிழ் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.இந்த நிலையில் நடிகர் தனுஷ் இந்த படத்தின் இயக்குநரான அபிஷன் ஜீவந்த் சந்தித்து “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படத்திற்கு வாழ்த்துகள் கூறியதாக அபிஷன் ஜீவந்த் தனது சமூக வலைத்தளபக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக வலைத்தள பக்கத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.