பொழுதுபோக்கு

தெலுங்கில் குழந்தை நட்சத்திரம்: இப்போ தமிழ் சினிமாவில் வைரல் ஸ்டார் இவர் தான்: யார்னு தெரியுதா?

Published

on

தெலுங்கில் குழந்தை நட்சத்திரம்: இப்போ தமிழ் சினிமாவில் வைரல் ஸ்டார் இவர் தான்: யார்னு தெரியுதா?

சினிமா ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களின் பலவிதமான விஷயங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். குறிப்பாக, அவர்களின் சிறுவயது புகைப்படங்களுக்கு எப்போதுமே ஒரு தனி வரவேற்பு இருக்கும்.அந்த வகையில், சமீபத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், சமீப காலமாக, இணையத்தில் அதிகம் பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திரமாகவும் இருக்கும் ஒரு நடிகரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.அந்த நட்சத்திரம் வேறு யாரும் இல்லை. ஜெயம் ரவியாக இருந்து தற்போது ரவி மோகன் என்று பெயரை மாற்றிக்கொண்ட நடிகர் தான். அந்த புகைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக ரவி மோகன் கேமராவுக்கு முன்னால் மிகவும் இயல்பான தோற்றத்துடன், அப்பாவியான கண்களுடன் காணப்படுகிறார்.இது அவர் சிறுவயதில் நடித்த திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு காட்சி என தெரிகிறது. ரவி, தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட கேரக்டாகளில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.அதே சமயம், இந்த அரிய புகைப்படம், அவர் சிறுவயதில் இருந்தே திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியதை நினைவுபடுத்துகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று முன்னணி நாயகனாக உயர்ந்து நிற்கும் அவரது வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால், ரசிகர்கள் பலரும் ரவியின் திரையுலக பயணத்தை நினைவுகூர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இதற்கிடையில், ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் திருமண உறவை முறித்துக்கொண்டு, விவாகரத்து பெற விண்ணப்பித்துள்ளார். அதே சமயம் சமீபத்தில் ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில், பாடகி கனீஷா பிரான்சிஸூடன் கலந்துகொண்டார்.இந்த நிகழ்வு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக ரவி மோகன், இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். தனது மனைவியின் குடும்பத்தின் மீது ரவி மோகன் குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், அதற்கு ஆர்த்தியின் அம்மா சுஜாதா பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version