இலங்கை

தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Published

on

தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 18 திகதி வரை 1,264 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் ஓட்டமாவடி, மட்டுநகர் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேசங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மே மாதம் 18 ஆம் திகதி வரை 161 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

தேசிய டெங்கு வாரத்தினை முன்னிட்டு ஓட்டமாவடி, வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர் , மட்டு நகர், களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களில் விசேட டெங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருவதுடன் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள சூழல் அகற்றப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் டெங்கு நோயினால் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளது

மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் நீர் தேங்கியிருக்கும் பொருட்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை வைத்துக் கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version