இலங்கை
நாட்டில் கொட்டி தீர்க்கும் மழை ; மக்களுக்கு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை
நாட்டில் கொட்டி தீர்க்கும் மழை ; மக்களுக்கு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால், நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி, புத்தளம் மாவட்டங்களிலும், சில இடங்களில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை நிலச்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.