இந்தியா
பாகிஸ்தானின் ட்ரோன் தந்திரம்: சாதாரண ட்ரோன்களுக்குள் தாக்குதல், கண்காணிப்பு ட்ரோன்கள்
பாகிஸ்தானின் ட்ரோன் தந்திரம்: சாதாரண ட்ரோன்களுக்குள் தாக்குதல், கண்காணிப்பு ட்ரோன்கள்
இந்திய வான்வெளியில் தரம் குறைந்த மலிவான பாகிஸ்தான் ட்ரோன்கள் கூட்டமாகப் பறந்தன. அவற்றில் ஒருசில கண்காணிப்பு தாக்குதல் ட்ரோன்களை மறைத்து வைத்திருந்தது பாகிஸ்தானின் உத்தி. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிராக இந்தியா ”ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையைத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவ நிலைகளை படம்பிடிப்பது, உளவுத் தகவல்களை சேகரிப்பது, தாக்குதல் நடத்துவது மற்றும் வான் பாதுகாப்பை அதிகப்படுத்துவது ஆகியவை இதன் நோக்கங்களாக இருந்தன என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.ராணுவத் தகவல்படி, இந்தியா தனது இராணுவ நடவடிக்கையை மே 7-ஆம் தேதி தொடங்கிய ஒருநாளில், பாகிஸ்தான் பல்வேறு இடங்களில் பரமுல்லாவிலிருந்து பார்மர் வரை ட்ரோன்களை கூட்டமாக அனுப்பத் தொடங்கியது. இந்த நடவடிக்கை 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இருநாட்டு ராணுவத் தலைமையக அதிகாரிகள் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்ட பிறகும் 2 நாட்கள் ட்ரோன்கள் பறப்பது தொடர்ந்தது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Pakistan deployed attack and surveillance drones hidden in swarms of basic dronesமே 8-ந்தேதி இரவில் முதல் அலையில் ஆயுதம் ஏந்திய டிரோன்கள் இருந்த நிலையில், அடுத்த இரவு அனுப்பப்பட்ட 2-வது அலை டிரோன்களில் அதிகமானவை இருந்தன. ஒவ்வொரு ஊடுருவல் அலையிலும் சுமார் 300 முதல் 400 டிரோன்கள் கூட்டமாக அனுப்பப்பட்டன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த 2 நாட்களில் குறைந்த அளவிலான டிரோன் ஊடுருவல்கள் காணப்பட்டன. போர் நிறுத்தத்திற்கு இருதரப்பும் ஒப்புக்கொண்ட பிறகு நடந்த ஊடுருவல்களில் பாகிஸ்தான் தனது ஈடுபாட்டை மறுத்தது.“ட்ரோன்களில் பல சிறியவை; அவற்றில் கேமரா (அ) வேறு எந்த கண்காணிப்பு சாதனமும் இருக்கவில்லை. இந்தியாவின் ரேடார் அமைப்புகள், இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகள் எங்கு எங்கு உள்ளன? என்பதைப் பற்றிய தகவல்களை சேகரிப்பதும், எதிர்காலத்தில் பயன்படுத்த இயலுமாறு அந்த வான்பாதுகாப்பு வலையமைப்பில் உள்ள சிதறல்களை கண்டுபிடிப்பதும்தான் இதன்நோக்கம்” என தி இந்திய எக்ஸ்பிரஸ்-க்கு தெரியவந்துள்ளது. மற்றொரு நோக்கம், இந்தியாவின் ராணுவ வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவதையும், இந்திய வான்பாதுகாப்பு அமைப்புகளின் துல்லியமான இருப்பிடங்களைப் பதிவுசெய்து அவற்றைச் சிதைக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுப்பதும்தான்.”குறிப்பாக போர் நிறுத்தத்திற்குப் பிறகு, எந்தவொரு ஒப்பந்த மீறல் குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் வகையில், டிரோன்களுடன் மறுக்கக்கூடிய காரணியும் இருந்தது. எந்தவொரு கண்காணிப்பு சாதனம் (அ) ஆயுதம் இல்லாத டிரோன்களுக்கு இது மிகவும் பொருந்தும்” என்று தகவலறிந்த வட்டாரம் கூறியது. மேலும், டிரோன் ஊடுருவல் இந்திய வெடிபொருட்களின் செலவுக்கு வழிவகுத்தன என்றும் குறிப்பிட்டனர். இந்த காலத்தில் அதிக எண்ணிக்கையிலான டிரோன்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது என்றும் அந்த வட்டாரம் கூறியது.வட்டாரங்களின்படி, இந்திய ராணுவ நிலைகளையும் பிற முக்கியமான இடங்களையும் வரைபடமாக்குவதற்காக அனுப்பப்பட்ட கண்காணிப்பு டிரோன்களில் பாகிஸ்தான் LiDAR (ஒளி கண்டறிதல் வரம்பு) தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது. அனைத்து டிரோன்களின் தோற்றம் தெளிவாக இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் சில துருக்கிய UAV-கள் பயன்படுத்தப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.இந்தியாவால் நிலைநிறுத்தப்பட்ட பல்வேறு வான் பாதுகாப்பு தளங்கள் மற்றும் உபகரணங்கள், மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, இந்த டிரோன்கள் ஊடுருவிய உடனேயே அவற்றை திறம்பட கண்காணித்து வீழ்த்தின.”ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்த டிரோன்களில் பெரும்பாலானவை ராணுவத்தின் பழைய சோவியத் வம்சாவளியை சேர்ந்த L/70 துப்பாக்கிகளால் உள்நாட்டு வெடிபொருட்களைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால், மற்ற அதிநவீன மற்றும் புதிய தலைமுறை ஏவுகணைகள் பிற பணிகளுக்காகப் பாதுகாக்கப்பட்டன” என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.திங்களன்று, இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்ட பாகிஸ்தானிய விமான தளங்களில் ஏற்பட்ட சேதத்தின் காட்சி ஆதாரங்களையும், பல்வேறு பாக்., டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் காட்சி ஆதாரங்களையும் ஆயுதப்படைகள் வெளியிட்டன.தற்போதைய நடவடிக்கைகளில் பாக்., அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் போரில் நிரூபிக்கப்பட்ட பெச்சோரா, ஓசா-ஏகே மற்றும் எல்எல்ஏடி போன்ற வான் பாதுகாப்பு ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் ஆகாஷ் அமைப்பு போன்ற உள்நாட்டு வான் பாதுகாப்பு ஆயுதங்களின் சிறந்த செயல்திறனையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.