சினிமா

மோகன்லால் படத்திற்கு பாராட்டுத் தெரிவித்த சூர்யா குடும்பம்..! – மகிழ்ச்சியில் இயக்குநர்..!

Published

on

மோகன்லால் படத்திற்கு பாராட்டுத் தெரிவித்த சூர்யா குடும்பம்..! – மகிழ்ச்சியில் இயக்குநர்..!

மலையாள சினிமா எப்போதும் சிந்தனை மற்றும் யதார்த்தம் நிறைந்த படைப்புகளுக்காகப் பெயர் பெற்றது. அந்தவகையில், இப்போது ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் படங்களில் ஒன்றாக  “துடரும்” காணப்படுகின்றது. மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகிய முன்னணி நடிப்புத் திறனுடைய நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுப் பெற்றதுடன் விமர்சன ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. இப்படத்தை இயக்கிய தருண் மூர்த்தி, சமூக விழிப்புணர்வு மற்றும் யதார்த்தக் கதைகளைக் கொண்ட பல படங்களை இயக்கியவர். அவரின் இயக்கத்தில் உருவான ‘துடரும்’ அரசியல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் குடும்ப உறவுகளின் வலிகள் குறித்து பேசும் திரைப்படமாக உருவானது.மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகியோர் இப்படத்தில் மிக அழுத்தமான நடிப்பைக் கொண்டு வந்துள்ளனர். படம் வெளியான முதல் வாரமே விமர்சகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பைப் பெற்றது. இப்படம் குறித்த தகவல் தமிழ் திரையுலகத்தில்  பரவலடைந்திருந்தது. அந்தவகையில் தற்பொழுது நடிகர் சூர்யா, அவரது சகோதரர் கார்த்தி மற்றும் ஜோதிகா, தங்கள் நேரத்தை ஒதுக்கி, ‘துடரும்’ திரைப்படத்தை நேரில் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டோம் எனக் கூறியுள்ளனர்.மேலும் இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டியும் உள்ளனர். இந்நிகழ்வின் போது சூர்யா, “இவ்வளவு ஆழமான சினிமா கொடுத்திருக்கிறீர்கள். இயக்குநராக நீங்கள் சமூகத்தை புரிந்து கொண்ட விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தமிழிலும் இப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version