சினிமா
ரவி மோகன் – ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ் தான் காரணம்.. பிரபலம் உடைத்த பெரிய ட்விஸ்ட்
ரவி மோகன் – ஆர்த்தி பிரிவுக்கு தனுஷ் தான் காரணம்.. பிரபலம் உடைத்த பெரிய ட்விஸ்ட்
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய நிலையில், தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.இது ஒரு புறம் இருக்க பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் காதலில் இருப்பதாகவும் செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில், பேட்டி ஒன்றில் பாடகி சுசித்ரா இந்த பிரச்சனைக்கு தனுஷ் தான் காரணம் என்று கூறி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” ஆர்த்தி ரவி திருமணத்துக்கு பின் வேறொரு பெண்ணாக இருந்தார். ஜெயம் ரவி ஷூட்டிங் போன பின் ஆர்த்தி பார்ட்டிக்கு செல்வார், அப்படி பார்ட்டிக்கு சென்றபோது தனுஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமானார்கள்.இந்த விஷயமெல்லாம் ரவி மோகனுக்கு தெரிந்த பின்னரே அவர் ஆர்த்தியை விட்டு பிரிய முடிவு செய்தார். ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு அனுதாபம் தேட முயற்சிப்பது மட்டுமின்றி பல யூடியூப் சேனல்களுக்கு காசு கொடுத்து ரவி மோகன் – கெனிஷா பற்றி அவதூறு பரப்பி வருகிறார்.கெனிஷா மிகவும் அப்பாவி அவர்கள் இருவரும் தற்போது ரிலேஷன் ஷிப்பில் தான் உள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார்.