சினிமா
ராஜா மோகன் மாற்றும் அர்ச்சனா தனி ஒருவன் 2 புது அப்டேட் …!மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!
ராஜா மோகன் மாற்றும் அர்ச்சனா தனி ஒருவன் 2 புது அப்டேட் …!மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடித்த இப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடந்து தனி ஒருவன் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் ராஜா மற்றும் அர்ச்சனா புது அப்டேட் ஒன்றினை கொடுத்துள்ளார். இந்த படத்தில ஜெயம் ரவி கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் அரவிந்த் சாமி வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்திற்கான தனி ஒருவன் 2 வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டிருந்தனர் .இதனை தொடர்ந்து தனி ஒருவன் 2 படத்திற்கான அதிகாரபூர்வமானா அறிவிப்பு வீடியோவுடன் வெளிவந்திருந்தது. ஆனால் படப்பிடிப்பது ஆரம்பிக்கபடவில்லைஇந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜா மோகன் மற்றும் அர்ச்சனா அவர்களிடம் தனி ஒருவன் 2 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குநர் மோகன் ராஜா ” நல்ல வேலை இருவரும் இருக்கும் போது இந்த கேள்வியை கேட்டிங்க இந்த படத்திற்கு நீங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கு காதலுக்கும் நன்றி என்றும் தெரிவித்து இருந்தார்.அந்த திரைப்படம் எங்களுடைய பெருமைக்குரிய படம் என்றும் எல்லாம் ரெடியா இருக்கு தயாரிப்பு நிறுவனம் சரியான நேரம் வரும் போது கூறுவதாக தெரிவித்துள்ளனர்” என்று ராஜா மோகன் கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து பதில் அளித்த தயாரிப்பாளர் அர்ச்சனா “நான் இந்த திரைப்படத்திற்குத்தான் முதல் விருது வாங்கினேன். எங்கள் தயாரிப்பில் உருவான சிறந்த படங்களில் ஒன்று இந்த படம் அதுமட்டுமல்லாமல் தனி ஒருவன் 2 மிகப்பெரிய படம், முதல் பாகம் போல் இல்லை அதனால் சரியான நேரம் பார்த்து தொடங்க உள்ளோம்.நிச்சயமாக தனிஒருவன் 2 திரைப்படம் வரும் இந்த திரைப்படத்தில் ரவி மற்றும் நயன் கண்டிப்பாக இருப்பாங்க என்றும் தற்போது சரியான நேரத்தை தேர்ந்து எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.