பொழுதுபோக்கு
‘வாலி’ நான் நடிக்க வேண்டிய படம்; ஆனா என்னோட பேட் லக்: பிரபல நடிகை வருத்தம்!
‘வாலி’ நான் நடிக்க வேண்டிய படம்; ஆனா என்னோட பேட் லக்: பிரபல நடிகை வருத்தம்!
அஜித் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்று இன்றுவரை பேசப்படும் ஒரு படமாக மாறியுள்ள வாலி திரைப்படத்தில் சிம்ரன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் என்று நடிகை மீனா கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அஜித், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில், வெளியான, விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துது. தற்போது கார் ரேஸ் பந்தையத்தில் பங்கேற்றுள்ள அஜித், தனது அடுத்த படம் நவம்பர் மாதம் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார்.இதனிடையே அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது. இன்று நடிப்பில் கலக்கிக்கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படமாக வாலி தான் ஜோதிகா தமிழில் அறிமுகமான முதல் படம். அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், சிம்ரன், விவேக், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1999-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.அதேபோல் இந்த படத்தில் அஜித் – சிம்ரன் இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் இந்த படத்தில் சிம்ரன் நடித்த ப்ரியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனா தான். வாலி வெளியான 1999-ம் ஆண்டு ஆனந்த பூங்காற்றே என்ற படம் வெளியானது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதன்பிறகு, வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட படங்களிலும் அஜித் – மீனா இணைந்து நடித்திருந்தனர். ஆனால், வாலி படத்தில் மீனா நடிக்க முடியாமல் போனது.இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய மீனா, என் டைமில்தான் அஜித் சூப்பர் கேரக்டர் பண்ணார். அப்போது படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர் அவருக்கு அமைந்துகொண்டிருந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்துது. குறிப்பாக வாலியில் சூப்பர் கேரக்டர். நான் அந்த கேரக்டரை மிகவும் விரும்பினேன். ஆனால் அப்போது அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதால், நான் கொடுத்த கால்ஷீட் வீணாகிவிட்டது. இதனால் அடுத்து அவர்கள் டேட்ஸ் கேட்கும்போது என்னால் கொடுக்க முடிவில்லை. அதனால் அந்த படத்தை மிஸ் செய்துவிட்டேன்.இப்போதும் எஸ்.ஜே.சூர்யா, சொல்வார் இந்த கோரக்டர் நீங்கள் பண்ண வேண்டியது. ஆனால் உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை நான் மிஸ் பண்ணிட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். இது என்னோட பேட்லக் என்று மீனா கூறியுள்ளார்.