சினிமா
விஷால் – சாய் தன்ஷிகா காதல் உறவு உறுதியா..? வெளியான குட்நியூஸ் இதோ..!
விஷால் – சாய் தன்ஷிகா காதல் உறவு உறுதியா..? வெளியான குட்நியூஸ் இதோ..!
தமிழ் சினிமா உலகம் தற்போது எதிர்பாராத ஒரு செய்தியை அறிந்து மிகவும் சந்தோசத்தில் உள்ளது. அந்த செய்தி என்னவென்றால் நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம் நடைபெறப்போகின்றது என்பது தான். அதிலும் முக்கியமாக, அவர் திருமணம் செய்யவிருக்கும் பெண், பிரபல நடிகை சாய் தன்ஷிகா என்பதுதான் தற்போது திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷால், தனது இயக்கத்தில் சில வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து, இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகளுடன் பணியாற்றி வருபவர். அதே நேரத்தில், தமிழ் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தின் செயல்திறன், தேர்தல் விவகாரங்கள், நடிகர் சங்க கட்டிடம் போன்ற பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியில், “தனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், ஆனால் யார் என்பதைக் குறிப்பிட முடியாது” என்றும் அவர் கூறியிருந்தார். தற்பொழுது அந்த நடிகை குறித்த தகவலை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.நடிகை சாய் தன்ஷிகா, தனது சினிமா பயணத்தில் ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தவர். பல படங்களில் அவர் நடித்த நடிப்பு, திரைத்துறையின் கவனத்தை ஈர்த்தது. அந்தவகையில் விஷாலும், தன்ஷிகாவும் கடந்த சில வருடங்களாக நெருங்கிய உறவில் உள்ளனர் என்பது சினிமா வட்டாரத்தில் பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகின்றது. இன்று மாலை நடிகை சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகிடா என்கிற படத்தின் விழா நடக்கவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துகொள்ளப்போவதுடன், அதில் இருவரும் தங்கள் காதல் மற்றும் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.