இந்தியா

அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு!

Published

on

அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு!

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு மற்றும் வங்கி சலுகை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்திட 7 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆயுள், தனிநபர் விபத்து காப்பீடு போன்றவற்றிற்கு பெரும் தொகையை செலவழிப்பதை தவிர்க்க காப்பீடுகளை கட்டணமின்றி பெறும் வகையில் அரசு முன்னணி வங்கிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சலுகைகளை பெற்று தருவதற்கு முன்வந்துள்ளது.

அதன்படி, அரசு அலுவலர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தாலோ, விபத்து காரணமாக ஊனமடைந்தாலோ தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக 1 கோடி ரூபா நிதியும், உயிரிழந்தால் அவரது குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டிய மகள்களில் 2 பேருக்கு ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement

மேற்கண்ட சலுகைகள் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு தங்களது ஊழியர்கள் ஊதியக்கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்த விதக் கட்டணம் இன்றி வழங்கிட முன்வந்துள்ளன.

மேலும், இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன.

இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு சார்பில் கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநர் மற்றும் முன்னோடி வங்கிகளின் உயர் அலுவலர்களால் புரிந்துணர்வு கையெழுத்திடப்பட்டன.

Advertisement

ஒப்பந்தநிகழ்வில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் நாகராஜன், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை அதிகாரி மற்றும் வங்கிகளின் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version