சினிமா

ஆர்த்தி ரவி என்றே அழையுங்கள்..! பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!

Published

on

ஆர்த்தி ரவி என்றே அழையுங்கள்..! பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆர்த்தி வெளியிட்ட பதிவு..!

தமிழ் சினிமா உலகத்தில், அண்மைக்காலமாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட விவாகரத்து விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. பல வதந்திகள், பரவலாகப் பேசப்படும் கருத்துக்கள் இதன் பின்னணியில் இருந்தாலும், இதுவரை ஆர்த்தி மற்றும் ரவி தங்களது கருத்துக்களை ஒரு அறிக்கையாக வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஆர்த்தி ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி மிகுந்த பதிவு ஒன்றினை தற்பொழுது வெளியிட்டு, இந்த பிரிவுக்குப் பின்னால் இருப்பது பணமோ, அதிகாரமோ அல்ல, மூன்றாவது நபர் தான் காரணம் என விளக்கமளித்துள்ளார். இப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் மீடியா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதன்போது ஆர்த்தி, “உங்கள் அனைவருக்கும் ஒளியாக இருக்க கூடியவர், என் வாழ்க்கையில் இருளாக மாறிவிட்டார்…” என்றும் தெரிவித்திருந்தார். இந்த ஒரு வரியே, அவருடைய மனநிலை மற்றும் கடந்த கால அனுபவங்களைக் கூறியுள்ளது. ஒரு முறை காதலாகத் தொடங்கிய உறவு, இன்று வருத்தமாகவும் வலியாகவும் மாறியிருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.மேலும், “தயவுசெய்து என்னை ஆர்த்தி ரவி என்றே குறிப்பிடுங்கள். அந்த அடையாளமே எனது வாழ்க்கையின் உண்மையான பகுதி.” என்றும் கூறியிருந்தார். இந்த வார்த்தைகள், ஒரு பெண் தனது அடையாளத்திற்காக எவ்வளவு உறுதியோடு நிற்கிறாள் என்பதையும், பிரச்சனைகள் நிகழ்ந்த பிறகும் அந்த அடையாளத்தை தக்கவைத்துக்கொள்கின்ற அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.ஆர்த்தியின் இந்த உருக்கமான பதிவு, யாரையும் நேரடியாக குற்றம் கூறும் விதமாக இல்லாதிருந்தாலும், உண்மை நிலையை சுட்டிக்காட்டும் தனிமனித உரிமையின் அறிக்கை போல காணப்படுகின்றது. இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version