இலங்கை
இந்த ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!
இந்த ஆண்டின் இதுவரை 46 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 46 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
31 துப்பாக்கிச் சூடுகள் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களால் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
31 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய 27 கைத்துப்பாக்கிகள் மற்றும் ரி-56 ரகத் துப்பாக்கிகள் 14 உட்பட மொத்தமாக 41 துப்பாக்கிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன-என்றார்.