இலங்கை
இவரை தெரியுமா? உதவிகோரும் பொலிஸார்
இவரை தெரியுமா? உதவிகோரும் பொலிஸார்
நீர்கொழும்பு பொலிஸார் காணாமல்போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
49 வயதான கொட்டமல் பத்தே விதானலாகே நில்மினி திலக்கா குமாரி எனும் பெண்ணே காணாமல்போயுள்ளார்.
பெண் காணாமல் போனதாக பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் பெண் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் 071 – 8591630 அல்லது 031 – 2222222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.