இலங்கை
உப்பு தட்டுப்பாடால் பேக்கரி தொழிலுக்கு பாதிப்பு
உப்பு தட்டுப்பாடால் பேக்கரி தொழிலுக்கு பாதிப்பு
நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாடு காரணமாக தங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகையில், உப்பு பிரச்சினை குறித்து அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தற்போது உப்பு தொடர்பாக பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. நாங்கள் அமைச்சருக்கும் இது குறித்து அறிவித்திருக்கிறோம். அமைச்சர் தேவையான அளவு உப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதற்காக காத்திருக்கிறோம். ஏனெனில், பேக்கரிகளுக்கு உப்பு கட்டிகள் தேவையில்லை, பெரும்பாலும் உப்பு தூள் பயன்படுத்தப்படுகிறது. உப்பு தூளில் தான் தட்டுப்பாடு உள்ளது.
பேக்கரி பொருட்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு உப்பு தூள் தேவைப்படுகிறது. அடுத்த வாரத்திற்குள் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறோம் எனவும் அவர் கூறினார்