இலங்கை

ஒரு லட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

Published

on

ஒரு லட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

    2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவு செய்தவர்கள் 36,263 பேர்.

இந்தக் குழுவில் 39,496 பெண்களும் 60,917 ஆண்களும் அடங்குவர்.

அதேவேளை குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டன.

Advertisement

மேலும் இந்த ஆண்டு 340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version