சினிமா

காதலி மற்றும் திருமண திகதியை அறிவித்த நடிகர் விஷால்

Published

on

காதலி மற்றும் திருமண திகதியை அறிவித்த நடிகர் விஷால்

தமிழ் சினிமாவில் இன்னமும் திருமணம் செய்யாமல் ஒரு சில நடிகர்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் விஷால்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பிறகே எனது திருமணம் என கூறியிருந்தார்.

Advertisement

9 ஆண்டுகளுக்கு பின் தற்போது அந்த கட்டிடமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. சமீபத்தில் விஷால் கூறும்போது, ‛‛திருமணம் முடிவாகிவிட்டது.

ஒரு மாதமாக தான் அந்த பெண்ணை காதலிக்கிறேன். இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விஷால் திருமணம் செய்யப்போகும் பெண் யார் விபரம் தெரியவந்துள்ளது. அவர் வேறுயாருமல்ல நடிகை சாய் தன்ஷிகா தான். தஞ்சாவூரை சேர்ந்த சாய் தன்ஷிகா, ‛பேராண்மை’ படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

Advertisement

தொடர்ந்து பரதேசி, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷாலுக்கும் இவருக்கும் இடையே காதல் உருவாகி திருமணம் வரை முடிவாகிவிட்டதாம்.

சாய் தன்ஷிகா நாயகியாக நடித்துள்ள ‛யோகி டா’ படத்தின் விழா சென்னையில் நடைபெறுகிறது. 

இந்த விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த சந்திப்பில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.அறிவிக்கப்பட்டது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version