சினிமா

சரிகமப சீனியர் சீசன் 5!! எப்போது தெரியுமா? வெளியான தகவல்..

Published

on

சரிகமப சீனியர் சீசன் 5!! எப்போது தெரியுமா? வெளியான தகவல்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியில் ஜூனியர் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மே 11 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சரிகமப நிகழ்ச்சியில் அடுத்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.இந்நிலையில் சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கவுள்ளது என்ற தகவல் வெளியானது. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் லாஞ்ச் வரும் மே 24 ஆம் தேதி ஆரம்பிக்கவுள்ளது.அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்வேதா மோகன் போன்றவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பாடகி சைந்தவி விலகியுள்ளாரே ஏன் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version