இலங்கை
தந்தையின் குற்றத்தில் மகனுக்கும் பங்கு; கெஹெலிய மகனுக்கு சிக்கல்
தந்தையின் குற்றத்தில் மகனுக்கும் பங்கு; கெஹெலிய மகனுக்கு சிக்கல்
சுமார் 8 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல,சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் கெஹெலிய இருந்து முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மகன் ரமித் ரம்புக்வெல்ல ,சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டார்.