சினிமா
தன்னை விட 26 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேர்ந்த சூர்யா!!
தன்னை விட 26 வயது குறைந்த நடிகையுடன் ஜோடி சேர்ந்த சூர்யா!!
நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.இந்த நிலையில், சூர்யாவின் 46வது படத்தின் பூஜை நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். முதல் முறையாக இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.இதற்கு முன் பாலா வணங்கான் படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், பின் வெளியேறினார்கள். மேலும் சூர்யாவை விட 26 வயது குறைந்தவர் நடிகை மமிதா பைஜூ என்பது குறிப்பிடத்தக்கது.