இலங்கை
தமிழின அழிப்புத் தொடர்பில் அமைதியாக இருக்கக்கூடாது
தமிழின அழிப்புத் தொடர்பில் அமைதியாக இருக்கக்கூடாது
ஒன்ராரியோ எம்.பி. சுட்டிக்காட்டு
தமிழின அழிப்புத் தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும்.
இவ்வாறு கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்த சூன்ய வலயங்கள் மற்றும் மருத்துவமனைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியும், முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப்பொருள்களை வழங்க மறுத்தும் இலங்கை அரசு இனவழிப்பொன்றை அரங்கேற்றியது.
இந்த வரலாறு மீண்டும் சம்பவிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சகலரதும் கடப்பாடு உண்டு. பாதிக்கப்பட்டவர்களது கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும்-என்று தெரிவித்துள்ளார்.