இலங்கை

தமிழ் டயஸ்போராவுக்கு அரசாங்க தரப்பில் ஆதரவு: குற்றம்சாட்டும் சரத் வீரசேகர

Published

on

தமிழ் டயஸ்போராவுக்கு அரசாங்க தரப்பில் ஆதரவு: குற்றம்சாட்டும் சரத் வீரசேகர

யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச் சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கருத்துகளை முன்வைத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாட்டைக் காட்டிக்கொடுத்து வருகிறார். விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அவரின் கருத்துகள் அமைந்துள்ளதாக ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைத்தார்.

Advertisement

 பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பறிகொடுத்து, சொத்துகளை இழந்து முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்து 16 வருடங்கள் நிறைவடைகின்றன.

எமது இராணுவ வீரர்களும் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.

 14,000 வரையான இராணுவத்தினர் அங்கவீனமுற்றுள்ளார்கள்.

Advertisement

எனவே, இது தமிழ் மக்களுடனான போராட்டம் அல்ல. நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக செயற்பட்ட விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுடனேயே நாங்கள் போராடினோம்.

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகத் தெரிவித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினர் ஆட்சிக்கு வந்தார்கள். தற்போதுள்ள அரசியலமைப்பில் பிரதானமாக இரண்டு விடயங்கள் இருக்கின்றன. 

ஒருவிடயம் இந்த நாடு சமயமில்லாத நாடாக வேண்டும். அதேபோன்று இந்த நாடு பெடரல் நாடாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அவ்வாறு எமது நாடு பெடரல் நாடாகினால் இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதில் எந்தப் பலனும் இல்லை. இந்த நாடு ஐக்கியமாக இருந்தால் மாத்திரமே இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பு கிடைக்கும்.

ஜெனீவாவில் தற்போது வெளிபொறிமுறையொன்றை வலியுறுத்தியுள்ளது. 

41/6 என்ற யோசனையில் அதனை நிறைவேற்றியுள்ளது. அதில் யுத்தத்துக்கு அரசியல் தலைமைத்துவம் மற்றும் யுத்த தலைமைத்துவத்தை வழங்கியவர்களை சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவதற்காக தற்போதும் சாட்சிகள் திரட்டப்பட்டு வருகின்றன.

Advertisement

பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதைச் செய்திருப்பார்கள் என்றால் யுத்தக் காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

 இது இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்படும் தேசத்துரோக யுத்தக் குற்றங்கள் மீதான வெளி பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.

இதனூடாக, யுத்தக் குற்றம் செய்தோமென்று தமிழ் மக்களைக் கட்டாயமாக அல்லது எந்தவொரு காரணமுமின்றி கொலைசெய்தோம், அவர்களை சித்திரவதை செய்தோம் என்றும் வேண்டுமென்றே சாட்சியளிப்பது போன்றதாகும்.

Advertisement

 யுத்தகாலத்தில் எந்தவொரு யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை என்பதுடன், அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். 

 அவ்வாறிருக்கையில், பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் ஏன் இவ்வாறு கூறுகிறார். விடுதலைப் புலிகள் தமிழ் டயஸ்போராவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறியிருக்கிறார்.

இவர் இதற்கு முன்னரும் இலங்கை சிங்கள பெளத்த நாடு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

இவ்வாறான நிலைப்பாடுகளைக்கொண்ட பிமல் தற்போது நாட்டைக் காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்.என்றார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version