இலங்கை

தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Published

on

தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் தேசிய பாதுகாப்பின் வீழ்ச்சி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (20) காலை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கயந்த கருணாதிலக, சிவஞானம் ஸ்ரீதரன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், கே. காதர் மஸ்தான், திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ஜே.சி. அலவத்துவல, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, பி. சத்தியலிங்கம், நிஸாம் காரியப்பர் ஆகிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

இந்த சூழ்நிலையில் நாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுச் சேவையை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக காலையில் சபாநாயகரைச் சந்திக்க எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர்.

குறித்த சந்திப்பின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பணிகளை பாராளுமன்றத்திலும் வெளியிலும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பும் கடமையும் சபாநாயகருக்கு உள்ளதை வலியுறுத்த வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

Advertisement

எழுந்துள்ள நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு பொலிஸ்மா அதிபரையும், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளரையும் உடனடியாக பாராளுமன்றத்திற்கு அழைக்குமாறு சபாநாயகரிடம் கோர வேண்டும் என கட்சித் தலைவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி சபாநாயகரைச் சந்தித்த கட்சித் தலைவர்கள் குறித்த முடிவுகள் மற்றும் யோசனைகள் குறித்து சபாநாயகருக்கு தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version