இலங்கை
நல்லூரில் அசைவ உணவகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!
நல்லூரில் அசைவ உணவகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக இன்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபை வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் மாநகர ஆணையாளரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர்.