இலங்கை

நீதவான் அலுவலக அறைக்குள் உறவு; காணொளியால் அதிகாரிகள் அதிர்ச்சி!

Published

on

நீதவான் அலுவலக அறைக்குள் உறவு; காணொளியால் அதிகாரிகள் அதிர்ச்சி!

நீதவானின் அலுவலக அறையில் இரகசியமாக பாலியல் உறவில் ஈடுபட்ட தால் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் அலுவலக அறை சீல் வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான்  தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய அவரது அலுவலக அறை சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் அலுவலக அறை சீல் வைக்கப்பட்டுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல நீதவான்  மற்றும் , பதில் நீதவான் தலைமை வழக்கறிஞர் ஆகியோர் , நீதவானின் அலுவலக அறையில் இரகசியமாக பாலியல் உறவில் ஈடுபட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் நீதிமன்ற சக ஊழியரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, நீதி அமைச்சகம் மற்றும் நீதித்துறை சேவை ஆணையத்திற்கு அனுப்பியதில் விசாரணை நடத்தக் கோரப்பட்டது.

Advertisement

அதன்படி, நீதித்துறை சேவை ஆணையம் அலுவலக அறைக்கு சீல் வைத்து, நீதவானின் சேவையை இடைநிறுத்தியுள்ளதுடன்  நீதிமன்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 அதேவேளை  சம்பந்தப்பட்ட நீதவான் இன்றைய தினம் (19) வந்து தனது தனிப்பட்ட உடமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபரின்   தந்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும், மறைந்த புகழ்பெற்ற பௌத்த தத்துவ அறிஞர், பேராசிரியராகவும் இருந்வர் எனவும் கூறிப்படுகின்ற நிலையில், அலவலகத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version