இலங்கை

படைவீரர் நினைவு நிகழ்வில் மீண்டும் மஹிந்த மற்றும் கோட்டா

Published

on

படைவீரர் நினைவு நிகழ்வில் மீண்டும் மஹிந்த மற்றும் கோட்டா

 படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் முன்னாள் ஜனதிபதிகளான மஹிந்த ராஜபக்சே மற்றும் கோட்டாபய ராஜபக்சே ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடாத்த அனுமதி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் தேசிய பொறுப்பாக கருதி எதிர்வரும் 20ம் திகதி போர் நினைவுத் தூபிக்கு அருகாமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாளைய தினம் நடைபெறவுள்ள தேசிய படைவீரர்கள் நினைவு நிகழ்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரிடம் கோரிக்கை விடுப்பதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version