பொழுதுபோக்கு

பள்ளியில் துளிர்விடும் 2-வது காதல்; திருமணத்தில் முடிக்க நடக்கும் முயற்சி: ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

Published

on

பள்ளியில் துளிர்விடும் 2-வது காதல்; திருமணத்தில் முடிக்க நடக்கும் முயற்சி: ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

பரமேஸ்வரி பாட்டியை அவமானப்படுத்திய சாமுண்டீஸ்வரி.. கார்த்திக் செய்த சிறப்பான சம்பவம் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் ஸ்வாதியை நிகழ்ச்சியில் பாட சொல்லி அட்வைஸ் செய்த நிலையில் இன்று, நவீன் ஹாஸ்பிடலில் கட்டை கவிழ்த்து விட்டு மயில்வாகனத்திடம் போனில் பேசி கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த துர்கா இவனை பார்த்து விட்டு கோபப்பட்டு வெளியே செல்கிறாள்.அடுத்து சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் எல்லாரும் வீட்டில் இருக்க அப்போது பரமேஸ்வரி பாட்டி கோவில் கும்பசாதத்துடன் வீட்டிற்குள் நுழைகிறாள். இது கோவில் திருவிழாவில் பங்கேற்றவங்க எல்லாரும் சாப்பிட வேண்டியது என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி இப்படி ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிட்டு இந்த வீட்டிற்கு வந்துகிட்டே இருப்பியா, உனக்கு வெட்கமாகவே இல்லையா என்று அவமானப்படுத்தி வெளியே துரத்துகிறாள்.வெளியே வந்த பரமேஸ்வரி பாட்டி கோவிலுக்கு சென்று முருகனிடம் புலம்ப அங்கு கார்த்திக் வருகிறான். சாப்பாட்டை கொடுங்க நான் பார்த்து கொள்கிறேன் என்று வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறான். எல்லாரும் சாப்பிட உட்காரும் சமயத்தில் கார்த்திக் திட்டத்தின் படி மயில்வாகனம் கரண்ட் கட் செய்து விடுகிறான். இதனால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து நிலா சோறு சாப்பிட கார்த்திக் கும்ப சாதத்தையும் சேர்த்து கொடுக்கிறான்.குடும்பமாக சந்தோசமாக இருக்க சுவாதியை பாட சொல்லி சந்தோசமாக இருக்கின்றனர். இதையடுத்து மயில் வாகனம் மீண்டும் பவர் ஆன் செய்து விடுகிறான். சந்திரகலாவிற்கு பக்கத்தில் வீட்டில் எல்லாம் கரண்ட் இருக்க நம்ம வீட்டில் மட்டும் எப்படி கரண்ட் கட் ஆனது என்ற சந்தேகம் எழுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,அறிவழகனை நெருங்கும் மாலதி.. பொஸசிவ்வில் புலம்பும் ரத்னா, பரணி கொடுத்த ஐடியா – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் அண்ணா இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் சூடாமணி போட்டோவை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்து விட இசக்கி கண் கலங்கி நின்ற நிலையில் இன்று, சண்முகத்தின் செயலால் இசக்கி மனமுடைந்து நிற்க வீட்டிற்கு வந்த பரணி நீ இப்படி பண்ணி இருக்க கூடாது, அவ என்ன தப்பு பண்ணா என்று சண்முகத்திடம் சண்டையிடுகிறாள்.சண்முகம் அவ எதுக்கு லேட்டா வந்தா என்று கோபப்பட பரணி இதற்கு இடையில் ஏதோ நடந்து இருக்கு என்று சொல்கிறாள். அடுத்ததாக வீட்டில் இசக்கி சாப்பிடாமல் வருத்தத்தில் இருக்கிறாள். மறுபக்கம் ஸ்கூலில் அறிவழகன் சாப்பிட்டு கொண்டிருக்க அங்கு வந்த மாலதி டீச்சர் அவனுடன் சாப்பிட உட்காருகிறாள்.ரத்னா வருவதை கவனித்த அவள் என்ன லன்ச் சார் என்று அறிவழகன் சாப்பாட்டை எடுத்து சாப்பிட அவன் மாலதி கொண்டு சாப்பாட்டை எடுத்து சாப்பிட ரத்னா இதை பார்த்து டென்ஷன் ஆகிறாள். பிறகு ஸ்கூல் முடிந்து கிளம்பும் போது மாலதி டீச்சர் தன்னுடைய ஸ்கூட்டரை கீழே தள்ளி விட்டு விழுந்து விட்டதாக நாடகம் போடுகிறாள்.இதை பார்த்த அறிவழகன் அவளுக்கு உதவி செய்ய ரத்னாவை பார்த்த மாலதி டீச்சர் அவனை கட்டியணைத்து நன்றி சொல்ல ரத்னா மேலும் கடுப்பாகிறாள். மாலதி டீச்சரை கூப்பிட்டு வார்னிங் கொடுக்க அவள் நான் எல்லாரிடமும் சோசியலாக தான் பழகுகிறேன், உங்க பார்வையில் தான் தப்பு இருக்கு என்று பதிலடி கொடுக்கிறாள்.ரத்னா கோபமாக வீட்டிற்கு வர அறிவழகன் வீட்டிற்கு வந்து சமாதானம் செய்ய முயற்சி செய்ய ரத்னா யார் யாரை கட்டி பிடிச்சா எனக்கு என்ன என்று தனது மனதுக்குள் இருக்கும் பொஸசிவ்வை வெளிப்படுத்த பரணி இதை நோட் செய்து அறிவழகனை சமாதானம் செய்கிறாள். ரத்னாவுக்குள் இருக்கும் காதலை வெளியே கொண்டு வந்து விட்டால் அவள் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி விடுவாள் என்று அறிவுரை வழங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version