டி.வி

பாக்கியா ஹோட்டலை இழுத்து மூடு..! உச்சகட்ட கோபத்தில் கத்தும் ஈஸ்வரி..! டுடே எபிசொட்..!

Published

on

பாக்கியா ஹோட்டலை இழுத்து மூடு..! உச்சகட்ட கோபத்தில் கத்தும் ஈஸ்வரி..! டுடே எபிசொட்..!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கவுன்சிலர் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட என்ன இருக்கு என்று கேக்கிறார். மேலும் தனக்கு முட்டையோட சாப்பாடு மட்டும் கொடுங்க நாங்க உடனே இங்க இருந்து போயிடுவேன் என்கிறார். இதனை அடுத்து பாக்கிய செல்வியை கவுன்சிலர் கேட்ட சாப்பாட்டை செய்து கொடுக்கச் சொல்லுறார். பின் செழியன் ஈஸ்வரியைப் பாத்து என்ன பாட்டி நீங்க இன்னும் தூங்கலயா என்று கேக்கிறார். அதுக்கு ஈஸ்வரி உங்கட அம்மா எத்தின மணிக்கு வாறா என்று பாத்திட்டு உட்கார்ந்திருக்கேன் என்கிறார்.இதனை அடுத்து செழியன் ஈஸ்வரியைப் பாத்து குழந்தையை வளர்க்கிறது ரொம்ப கஷ்டமா என்று கேக்கிறார். அதுக்கு ஈஸ்வரி குழந்தையை வளர்க்கிறது ஈஸியான விஷயமா நினைச்சிட்டியா என்கிறார். மேலும் நிறைய கஷ்டப்படணும் என்று செழியனுக்குச் சொல்லுறார். அப்புடியே இவங்க ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கும் போது அங்க பாக்கியா வந்து நிக்கிறார். அதனைப் பார்த்த ஈஸ்வரி நீ காலையில போய்ட்டு வாரதுக்குள்ள இங்க என்னவெல்லாம் நடக்குது என்று தெரியுமா என்கிறார்.அதுக்கு பாக்கியா அப்புடி என்ன நடந்திட்டு என்று கேக்கிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி அமிர்தா நிறைய வேலை செய்யுறாள் என்று எழில் கோபப்படுறான் என்றதுடன் நீ இந்தக் ஹோட்டலை மூடிட்டு வீட்டிலேயே இரு அப்பத்தான் எல்லாப் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும் என்கிறார். இதனை அடுத்து பாக்கியா அப்புடி நான் வீட்ட இருந்தால் தான் பிரச்சனை வராது என்றால் அது என்னால இப்போதைக்கு முடியாது என்று சொல்லுறார்.அதனை அடுத்து பாக்கியா வீட்டைப் பார்ப்பதற்காக ஆட்களை கூட்டிகொண்டு வாறார். அதைப் பார்த்த ஈஸ்வரி பாக்கியா நீ பண்ணுறது ரொம்பவே நல்லா இருக்கு என்று கோபமாகச் சொல்லுறார். பின் பாக்கியா தன்ர ஹோட்டலுக்குப் போய் எல்லா வேலைகளையும் செய்யுறார். இதனைத் தொடர்ந்து இனியா சுதாகரைப் பாத்து அம்மாவோட ரெஸ்டாரெண்டை எப்ப ஓபன் பண்ணப் போறீங்க என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர், கூடிய சீக்கிரம் ஓபன் பண்ணிடுவேன் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version