சினிமா

விஷால்-தன்ஷிகா ரிலேஷன்ஷிப் வைரல்! யாரு அந்த நியூஸ் லீக் பண்ணினாங்கன்னு தெரியலையே.!-தன்ஷிகா

Published

on

விஷால்-தன்ஷிகா ரிலேஷன்ஷிப் வைரல்! யாரு அந்த நியூஸ் லீக் பண்ணினாங்கன்னு தெரியலையே.!-தன்ஷிகா

தமிழ் திரையுலகில் தற்போது வைரலாகும் ஒரு முக்கியமான பேச்சு என்னவென்றால் நடிகை தன்ஷிகா மற்றும் விஷால் காதலிக்கின்றனர் எனும் தகவல் தான். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை தன்ஷிகா, ஒரு செய்தியாளர் சந்திப்பில் நேரடியாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.அதன்போது தன்ஷிகா கூறியதாவது, “எங்களுடைய லவ் நியூஸ் வெளியான உடனே, ‘இதயாரு லீக் பண்ணாங்கன்னு நாங்க சிந்திச்சுக்கிட்டு இருக்கோம். ஏன்னா… ஆகஸ்ட் 29 தான் நாங்க முடிவு பண்ணோம் ‘ஓகே, இது உண்மையான உணர்வு, காதலிக்கலாம் என்று. ஆனா, அந்த முடிவுக்குப் பிறகு, இவ்வளவு வேகமா  இது பப்ளிக் ஆகும் என்று எதிர்பாக்கல..” எனக் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது, தன்ஷிகா தொடர்ந்து கூறும்போது, அது ஒரு திடீர் திருப்பம் போல இருந்தது என்றும் பகிர்ந்துள்ளார். மேலும், “ஒரு ரெண்டு மாசமாவது சுகந்திரமா, யாருக்கும் தெரியாம திரிவோம்னு நினைச்சோம். ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல…!” என்றும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தன்ஷிகாவிடம் செய்தியாளர் ஒருவர், “அவரை எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க..!” என்று கேட்டிருந்தார். அதுக்கு தன்ஷிகா, “இதெல்லாம் வேற ஒரு இண்டர்வியூவில் சொல்லுறேன். இப்போ இவ்வளவும் காணும்..!” என்று கூறியிருந்தார்.தன்ஷிகா – விஷால் காதல் விவகாரம், தமிழ் சினிமா உலகில் தற்போது பேசப்படும் ஹாட் டாபிக். அவர்கள் இருவரும் இது குறித்து மேலும் வெளிப்படையாகப் பேசும் வரை, ரசிகர்கள் இது பற்றி வெளியாகும் கருத்துக்களுக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version