சினிமா
Princess லுக்கில் இன்ஸ்டாவைக் கலக்கும் திரிஷா..! வெளியான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ…!
Princess லுக்கில் இன்ஸ்டாவைக் கலக்கும் திரிஷா..! வெளியான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ…!
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத அழகு சிலையாக இன்று வரை திகழ்பவர் நடிகை திரிஷா. 2000களில் தமிழ், தெலுங்கு சினிமாவை ஆட்சி செய்த இவர், இன்றும் தனது அழகு, நடிப்பு, ஸ்டைலான கவர்ச்சியுடன் ரசிகர்களை வசீகரித்து வருகின்றார். அண்மையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், மிகவும் ஸ்டைலான உடையில், எளிமையான மேக்கப்புடன், கியூட்டாகத் தோன்றியுள்ளார். திரிஷாவின் அந்த ப்ரின்சஸ் லுக், அவருடைய வயதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.அண்மையில் திரிஷா நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அவர் நடித்த குந்தவை நாச்சியார் கதாப்பாத்திரம், தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன்பின், அஜித்துடன் இணைந்து “விடாமுயற்சி” மற்றும் ” குட் பேட் அக்லி ” போன்ற படங்களில் நடித்து திரிஷா மீண்டும் டாப் ஹீரோயின் நிலையை உருவாக்கி இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தகைய நடிகையின் இந்தப் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸினைப் பெற்றுள்ளன.