இந்தியா
இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 73 பேர் கைது
இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 73 பேர் கைது
பாகிஸ்தானுக்காக வேலைபார்த்த சந்தேகத்தின்பேரில் இதுவரை 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
நாட்டு நலனுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் ஊடகம் வழியாகப் பதிவிட்டுள்ள சர்மா, “சம்பளம், அதிகாரம், பதவி என இந்தியா வழங்கும் எல்லாச் சலுகைகளையும் பெற்று வந்தாலும் சிலரின் உண்மைப்பற்று எல்லை தாண்டியே உள்ளது.
“இந்தியாவிடமிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு பாகிஸ்தானின் நலனுக்காக அவர்கள் வேலைசெய்கின்றனர். இது துரோகம். ஆப்பரேஷன் சிந்தூரைப் போல, தேச விரோதிகளை அடையாளம் கண்டு, தண்டிக்கும் நடவடிக்கை தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தனிமனிதர்களை அடையாளம் கண்டு, கைதுசெய்ய அசாம் மாநிலக் காவல்துறை எடுத்துவரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
கைதானவர்கள் இந்தியாவிற்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகும் இந்தியா-பாகிஸ்தான் பதற்றநிலைக்கு இடையிலும் அவர்கள் அத்தகைய பதிவுகளை இட்டதாகக் கூறப்படுகிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை