இலங்கை
இராணுவத்தினர் புறக்கணிப்பு; நாமல் ராஜபக்ச கொதிப்பு
இராணுவத்தினர் புறக்கணிப்பு; நாமல் ராஜபக்ச கொதிப்பு
தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்கு முன்னுரிமையளிப்பதில்லை. விடுதலைப்புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் இராணுவ வீரர்களுக்காகவும், ஒற்றையாட்சிக்காகவும் என்றும் நாம் முன்னிற்போம். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளில் இராணுவத்தினருக்கு முன்னுரிமை இல்லை.
போரில் உயிர்நீத்த படைவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுக்கு சகல முன்னாள் அரச தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் இராணுவத்தினர் பழிவாங்கப்பட்டனர். புலனாய்வுப் பிரிவு வீழ்ச்சியடைந்தது. அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. தற்போது பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்கியுள்ளன. நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுமளவுக்கு புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்துள்ளது. புலனாய்வுப்பிரிவை பலவீனப்படுத்தி விட்டு தேசிய பாதுகாப்புத் தொடர்பில் வகுப்பெடுப்பதில் பிரயோசனம் இல்லை – என்றார்.