சினிமா

சம்பளத்திற்கு பதில் வீடு..! விசாரணையில் சிக்குவாரா சிவகார்த்திகேயன்..

Published

on

சம்பளத்திற்கு பதில் வீடு..! விசாரணையில் சிக்குவாரா சிவகார்த்திகேயன்..

அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்கை அடுத்தபடி உயர்ந்துள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து இவர் ஏ ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் “மதராசி” மற்றும் சுதா கெங்கார இயக்கத்தில் “பராசக்தி ” எனும் படங்களில் நடித்து வருகின்றார். தொடர்ந்து இவர் பல படங்களில் நடிப்பதறகு கமிட்டாகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.அந்த வகையில் இப் படங்களை தொடர்ந்து sk Good Night திரைப்பட இயக்குநர் விநாயக் இயக்கும் “SK-24” எனும் படத்தில் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளாராம் மேலும் இந்த படம் தந்தை மகனுக்கு உள்ள எமோஷன் நிறைந்த கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இவரது மதராசி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட்டு வருகின்றது. படப்பிடிப்பு முடிந்து வந்ததும் ஆகாஷ் பாஸ்கரனின் ரைடு விவகாரத்தில் sk சிக்குவாரா? இல்லையா ? எனும் விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் இவரது தயாரிப்பில் sk பராசக்தி எனும் படத்தில் நடிப்பதற்கு 70 கோடி சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சம்பளத்திற்கு பதிலாக வீடு கட்டி கொடுப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த செய்தி தெரிந்தால் இவரும் விசாரணை வளையத்தில் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version