சினிமா
தெய்வமகள் சீரியல் ஷூட்டிங்ல டைரக்டர் அசிங்கமா திட்டுனாரு!! வாணி போஜன் சொன்ன உண்மை..
தெய்வமகள் சீரியல் ஷூட்டிங்ல டைரக்டர் அசிங்கமா திட்டுனாரு!! வாணி போஜன் சொன்ன உண்மை..
சின்னத்திரை சீரியல்களில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் மிகப்பெரிய இடத்தினை பிடித்த நடிகைகளில் ஒருவர் நடிகை வாணி போஜன். சமீபத்தில் அளித்த பேட்டியில், தெய்வமகள் சீரியலில் ஏற்பட்ட நல்ல விஷயம், மோசமான விஷயம் என்ன என்று கூறியிருக்கிறார்.அதில், தெய்வமகள் சீரியலில் நடித்தபோது நடிப்பை கத்துக்கொண்டேன். ஒரு குடும்பமாக இருந்தது, குமரன் சார் எனக்கு சொல்லிக்கொடுத்தது நல்ல விஷயம். மோசமான விஷயம் என்றால், ஒன்றே ஒன்று நியாபகம் இருக்கு, அதன்பின் திட்டு வாங்குனது கிடையாது.எக்கச்சக்கமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்-ஐ வைத்து ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க, அதிகபேர் அங்கு இருந்தார்கள். என்னை அசிங்கமா மைக்கில் திட்டுனாரு, எல்லாரும் என்னையே பார்த்தாங்க, எனக்கு சங்கடமாக இருந்தது, அழுதுவிட்டேன். நடிக்கத்தெரியுமா? தெரியாதா? என்று கண்டபடி திட்டிவிட்டார்.அதன்பின் சார் என்னை கூப்பிட்டு பேசினார். அதை நான் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை, கற்றுக்கொள்ளும் விஷயமாக பார்த்ததாக வாணி போஜன் தெரிவித்துள்ளார்.